ஷிபா மருத்துவமனையில் பாம்பு கடிக்கு துரித சிகிச்சை: உயிர் காக்கப்பட்ட முதியவர்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர்  பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு, உடனடியாக ஷிபா மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு வரப்பட்டா ர். அவரை அவசர சிகிச்சை நிபுணர் டாக்டர். லோபோ டேவிட் தலைமையிலான மருத்துவ குழுவினர்  பரிசோதித்தனர் .

snake bite treatment

நோயாளியின் இடது காலில் பாம்பு கடித்ததற்கான தடயங்கள் காணப்பட்டன. கடித்த தடயங்கள் மற்றும் நோயாளியின் மருத்துவ நிலை ஆகியவற்றின் அடிப்படையில், ரஸ்ஸல் வைப்பர் கடி என சந்தேகிக்கப்பட்டு, விஷத்தின் தாக்கத்தைத் தடுக்கும் வகையில் ஆன்ட்டி – ஸ்நேக் வெனம் உடனடியாகத் தொடங்கப்பட்டது. இதனுடன், நோயாளியின் உடல்நிலைக்கு ஏற்ப தேவையான துணை  சிகிச்சைகளும் வழங்கப்பட்டன. தொடர்ச்சியான கண்காணிப்பு ரஸ்ஸல் வைப்பர் போன்ற விஷப்பாம்புகளின் கடியில் இரத்தம் உறையும் தன்மை பாதிக்கப்படுதல், இரத்தப்போக்கு மற்றும் பிற உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகள் போன்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், நோயாளி தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டார். குறிப்பாக, ஹோல் பிளட் க்ளாட்டிங் டைம்  தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு, இரத்தம் உறையும் தன்மையில் ஏற்படும் மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டன. மேலும், சுவாச தசைகளில் விஷத்தின்  தாக்கம் ஏற்படுகிறதா என்பதைக் கண்டறிய Single Breath Count பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

அதை தொடர்ந்து நோயாளி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு நெஞ்சக மற்றும்   தீவிர சிகிச்சை மருத்துவர் பாலா தலைமையிலான மருத்துவ குழுவினர்  24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு  மற்றும் தேவையான சிகிச்சை அளித்தனர்

மருத்துவக் குழுவினர் நோயாளியின் வைட்டல் சைன்ஸ் , இரத்தம் உறையும் தன்மை , சுவாசநிலை மற்றும் விஷத்தின் தாக்கம் தொடர்பான அறிகுறிகள்  ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்தனர். சரியான நேரத்தில்  ஆன்ட்டி – ஸ்நேக் வெனம் சிகிச்சை , துணை  சிகிச்சை மற்றும் தொடர் மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டதன் மூலம் நோயாளியின் உடல்நி லையி ல் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை சீராகி , எந்தவித தீவிர சிக்கல்களும் இன்றி வார்டிலிருந்து நிலையான உடல்நிலையில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

இதுகுறித்து அவசர சிகிச்சை மருத்துவ துறை தலைவர் லோபோ டேவிட் கூறுகையில் பாம்பு கடித்தால் உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம் பாம்பு கடித்தவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை செய்வது, காயத்தை வெட்டுவது, விஷத்தை வாயால் உறிஞ்சுவது அல்லது தேவையற்ற இறுக்கமான கட்டுகளைப் போடுவது போன்ற செயல்களைத் தவிர்த்து, விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது மிகவும் முக்கியம். குறி ப்பாக விஷப்பாம்பு கடி சந்தேகம் இருந்தால், மருத்துவமனையில் தேவையான பரிசோதனைகள் மற்றும் தொடர் கண்காணிப்புடன் சிகிச்சை பெறுவது உயிரைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஷிபா மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவின் ஒருங்கிணைந்த மருத்துவ அணுகுமுறையின் மூலம், பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட முதிவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்பட்டு, அவர் பாதுகாப்பாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் இவ்வாறு தெரிவித்தார்.

M.B.B.S, MEM

Emergency Physician

Shifa Hospitals

ஷிபா மருத்துவமனையில் பாம்பு கடிக்கு துரித சிகிச்சை: உயிர் காக்கப்பட்ட முதியவர்
Recovering from angioplasty goes beyond the hospital stay - it’s a journey of lifestyle changes that protect the heart for years to come. One of the most...
Suicide Prevention Begins With a Conversation | Shifa Hospitals
Recovering from angioplasty goes beyond the hospital stay - it’s a journey of lifestyle changes that protect the heart for years to come. One of the most...
A Healthier Lifestyle Starts With Your Everyday Habits
Recovering from angioplasty goes beyond the hospital stay - it’s a journey of lifestyle changes that protect the heart for years to come. One of the most...
Back Pain: Causes, Symptoms and How It Is Treated
Recovering from angioplasty goes beyond the hospital stay - it’s a journey of lifestyle changes that protect the heart for years to come. One of the most...
Simple Ways to Improve Sleep Quality
Recovering from angioplasty goes beyond the hospital stay - it’s a journey of lifestyle changes that protect the heart for years to come. One of the most...
Shortness of Breath: Common Causes You Should Know
Recovering from angioplasty goes beyond the hospital stay - it’s a journey of lifestyle changes that protect the heart for years to come. One of the most...
When Is a Medical Emergency? Warning Signs You Should Never Ignore
Recovering from angioplasty goes beyond the hospital stay - it’s a journey of lifestyle changes that protect the heart for years to come. One of the most...
How Stress Affects Your Body and Mind
Recovering from angioplasty goes beyond the hospital stay - it’s a journey of lifestyle changes that protect the heart for years to come. One of the most...
Stroke: Early Warning Signs You Should Never Ignore
Recovering from angioplasty goes beyond the hospital stay - it’s a journey of lifestyle changes that protect the heart for years to come. One of the most...
How to Maintain Your Health While Managing a Busy Work Life